3வது டி20 போட்டி: இலங்கை வெற்றிபெற 138 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா
- டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 137 ரன்களை எடுத்தது.
பல்லகெலே:
இந்திய அணி இலங்கையில் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் மற்றும் 2-வது போட்டியில் இந்தியா வென்று டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்தியா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் ஓரளவு தாக்குப் பிடித்தார்.
ஜெய்ஸ்வால் 10 ரன்னில் அவுட்டானார். சஞ்சு சாம்சன் டக் அவுட்டானார். ரிங்கு சிங் ஒரு ரன்னில் வெளியேறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 13 ரன்னில் அவுட்டானார்.
இதனால் இந்திய அணி 48 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து 54 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அதே ஓவரில் ரியான் பராக் 26 ரன்னில் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர் 25 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது.
இலங்கை சார்பில் தீக்ஷனா 3 விக்கெட்டும், ஹசரங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.