கிரிக்கெட்
null

நெருக்கிப் பிடித்த வேகப்பந்து வீச்சாளர்கள்: 7 ரன்னில் இந்தியா த்ரில் வெற்றி பெற்று சாம்பியன்

Published On 2024-06-29 18:04 GMT   |   Update On 2024-06-29 18:17 GMT
  • பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
  • பாண்ட்யா கடைசி ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தினார்.

டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.

2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.

5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.

6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும் எடுத்திருந்தனர்.

7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தென்ஆப்பிரிக்கா 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து.

9-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஸ்டப்ஸ் 5-வது பந்தில் போல்டானார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். அடுத்து கிளாசன் களம் இறங்கினார். தென்ஆப்பிரிக்கா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது.

10-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்தது.

தென்ஆப்பிரிக்காவுக்கு கடைசி 10 ஓவரில் அதாவது 60 பந்தில் 96 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் இருந்தது. 11-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

12-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸ் அடித்தார். அத்துடன் 11.3 ஓவரில் தெனஆப்பிரிக்கா 100 ரன்னைத் தொட்டது. இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்கா 8 ரன்கள் அடித்தது.

13-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டி காக், அடுத்த பந்தில் கேட்ச் ஆனார். அவர் 31 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 12.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது விக்கெட்டுக்கு கிளாசன் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். அப்போது 41 பந்தில் 70 ரன்கள் தேவைப்பட்டது.

14-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அப்போது 42 பந்தில் 68 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்த மில்லர், 6-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா 14 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் அடித்தது.

கடைசி 6 ஓவரில் அதாவது கடைசி 36 பந்தில் 54 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசன் மற்றும் மில்லர் இந்திய பந்து வீச்சை மிரட்டினர். 15-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 24 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா 15 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது.

கடைசி 5 ஓவரில் அதாவது 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா 16-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் இரண்டு ரன் எடுத்து கிளாசன் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 23 பந்தில் அரைசதம் அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 24 பந்தில் 26 ரன்கள் தேவைப்பட்டது.

17-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கிளாசன் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். அடுத்து மில்லர் உடன் யான்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 4 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்காவுக்கு கடைசி 18 பந்தில் 22 ரன்கள் தேவைப்பட்டது.

18-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் யான்சனை க்ளீன் போல்டாக்கினார். அடுத்து மகாராஜ் களம் இறங்கினார். இந்த ஓவரில் பும்ரா 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 12 பந்தில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

19-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா வீசினார். மில்லர் எதிர்கொண்டார். முதல் பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்றார். ஆனால் சூர்யகுமார் யாதவ் சூப்பராக சிக்ஸ் லைனில் பிடித்தார். இதனால் மில்லர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரபடா 5-வது பந்தில் ஆட்டழிந்தார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 13 வருடங்களுக்குப் பின் ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.

Tags:    

Similar News