முதல் ஒருநாள் போட்டி- இலங்கை அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
- டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிறகு 300 ரன்கள் குவித்தது.
- ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 53 ரன்களும், அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 51 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.
பல்லேகலே:
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலியா அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என கைப்பற்றியது.
இந்த நிலையில் இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிறகு 300 ரன்கள் குவித்தது. அந்த அணியில் குசால் மெண்டிஸ் 86 ரன்களும், பதும் நிசாங்க 56 ரன்களும், குணதிலக 55 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 301 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது. அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. பின்னர் மழை நின்றதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணிக்கு 44 ஓவர்களில் 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 42.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் 53 ரன்களும், அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 51 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தார்.