ஆன்மிக களஞ்சியம்

ஆலயத்தில் மூலவரின் அம்சமாக திகழும் இறை மூர்த்தங்களையும் வணங்குங்கள்!

Published On 2024-09-24 11:18 GMT   |   Update On 2024-09-24 11:18 GMT
  • சில பழமையான ஆலயங்களில், மூலவரே பல்வேறு பெயர்களில் பிரகாரங்களில் தனி தனி சன்னதிகளில் இருப்பதை காணலாம்.
  • இந்த இறைமூர்த்தங்களின்அவதார தோற்றம் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு வரலாறும் சிறப்பும் உள்ளது.

ஆலய வழிபாட்டின் போது கருவறை மூலவரை வழிபட்ட பிறகு பிரகாரங்களில் உள்ள தனி சன்னதிகளில் அருள்பாலிக்கும் இறைமூர்த்தங்களையும் நாம் தவறாது வழிபட வேண்டும்.

பக்தர்களில் பெரும்பாலானவர்கள் மூலவரிடம் காட்டும் பயபக்தி உணர்வை பிரகார சன்னதிகளில் வெளிப்படுத்துவதில்லை. இது தவறு.

வைணவத்தலங்களில் கருடர், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர் என்று பல்வேறு இறைமூர்த்தங்கள் தனி சன்னதிகளில் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சில பழமையான ஆலயங்களில், மூலவரே பல்வேறு பெயர்களில் பிரகாரங்களில் தனி தனி சன்னதிகளில் இருப்பதை காணலாம்.

இந்த இறைமூர்த்தங்களின்அவதார தோற்றம் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு வரலாறும் சிறப்பும் உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் மூலவரின் அம்சமாக பிரதிபிம்பமாகத் திகழும் இந்த இறைமூர்த்தங்கள் குறிப்பிட்ட பலன்களை மக்களுக்கு வாரி, வாரி வழங்கும் ஆற்றல் பெற்றவை.

எனவே ஆலய வழிபாடு செய்யும் போது, அந்த ஆலயத்தில் உள்ள அத்தனை சன்னதிகளிலும் தவறாமல் மனதை ஒருமுகப்படுத்தி வழிபாடுகள் செய்ய வேண்டும்.

சில சன்னதிகளில் அபிஷேக, ஆராதனை, நைவேத்திய, பூஜை முறைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அதற்கு ஏற்ப நாம் வழிபாடுகளை செய்தல் வேண்டும்.

Similar News

கருட வசனம்