ஆன்மிக களஞ்சியம்

நாராயணா என்ற பெயரின் அர்த்தம் உணர்ந்து சொல்லுங்கள்!

Published On 2024-09-24 11:12 GMT   |   Update On 2024-09-24 11:12 GMT
  • நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு.
  • பெருமாள்கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான்.

நாராயணன் என்ற பெயரில் நாரம் என்ற சொல் இருக்கிறது. நாரம் என்றால் தண்ணீர், தீர்த்தம் என்ற பொருள்கள் உண்டு.

பெருமாள்கோவில்களில் தீர்த்தம் கொடுப்பது கூட அவரது பெயர் காரணமாகத்தான்.

நாரம் என்ற சொல்லுக்கு பிரும்ம ஞானம் என்ற பொருளும் உண்டு. இந்த உலக வாழ்வு நிலையற்றது, என் திருவடியே நிலையானது என்ற தத்துவத்தையும் அவரது பெயர் உணர்த்துகிறது.

நாராயணன் என்பதை நாரம்+அயணன் என பிரிக்கலாம். நாரம் என்றால் தீர்த்தம். அயணன் என்றால் படுக்கை உடையவன்.

பாற்கடலாகிய தீர்த்தத்தில் பாம்பணையில் படுத்திருப்பவன் என்பதே நாராயணன் என்ற சொல்லுக்குப் பொருள். நாராயணனின் நாமத்தை அதிகமாக உச்சரிப்பவர் நாரதர்.

நாராயண நாராயண என்று உச்சரித்தபடியே தான் அவர் சகல லோகங்களுக்கும் செல்வார்.

இவர் தோன்றுவதற்கு முன், இந்த உலகில் தண்ணீர் என்பதே குறைவாக இருந்ததாம். அவரது பிறப்புக்கு பின்தான் தண்ணீர் அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நாரதர் என்ற பெயர் பெற்றார் என்பர்.

நாரதர் போல நாமும் நாராயணன் பெயரை அதிகம் உச்சரித்தால் வெள்ளமாக அருள் மழை பெற முடியும். அதுவும் புரட்டாசியில் உச்சரித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

Similar News

கருட வசனம்