- அம்பிகையை வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும். இவளை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
- மதுரை மீனாட்சியம்மன் பிட்டுக்கு மண்சுமந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
அம்பிகையை வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும். இவளை வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.
மதுரை மீனாட்சியம்மன் பிட்டுக்கு மண்சுமந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
அரிமர்த்தனபாண்டியன் ஆட்சி செய்தபோது, பெருமழை பெய்து வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
கரையை அடைக்க வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்புமாறு மன்னர் உத்தரவிட்டார்.
சிவ பக்தையான வந்தி என்பவள், பிட்டு விற்று பிழைத்து வந்தாள். அவளுக்கு கணவரோ, பிள்ளையோ இல்லை.
தன் பங்குக்கு யாரை அனுப்புவது என்று தவித்தாள். சிவனே கூலியாளாக தோன்றி, வந்திக்கு உதவ முன் வந்தார்.
கூலியாக பிட்டை வாங்கி சாப்பிட்டு விட்டு, கரையை அடைக்காமல் உறங்கத் தொடங்கினார்.
இதை அறிந்த மன்னன் பிரம்பால் சிவனை அடிக்க, அந்த அடி அனைவரின் உடம்பிலும் விழுந்தது.
சிவன் ஒரு கூடை மண்ணைக் கரையில் போட்டதும், வெள்ளம் கட்டுப்பட்டது. இக்கோலத்தை தரிசித்தால் மனக்கவலை விரைவில் நீங்கும்.
நைவேத்யம்: கல்கண்டு சாதம்
தூவ வேண்டிய மலர்: பிச்சிப்பூ