null
ராம நாமம் கேட்கும் இடமெல்லாம் ஆஞ்சநேயர் இருப்பார்!
- ராம அவதாரம் நிறைவு பெற்றுவிட்ட போதிலும் ஆஞ்சநேயர் இன்னமும் சிரஞ்சீவியாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
- ராம நாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கு நிச்சயம் ஆஞ்சநேயர் இருப்பார்.
ராம அவதாரம் நிறைவு பெற்றுவிட்ட போதிலும் ஆஞ்சநேயர் இன்னமும் சிரஞ்சீவியாக இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
அதனால் தான் ராமாயண சொற்பொழிவுகள், ராம கீர்த்தனம் ஆகியவை எங்கு நடந்தாலும் அங்கெல்லாம் ஆஞ்சநேயர் அமர்ந்து ஸ்ரீராம தியானத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார் என்கிறார்கள்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ராம நாமம் எங்கெல்லாம் கேட்கிறதோ, அங்கு நிச்சயம் ஆஞ்சநேயர் இருப்பார்.
அந்த வகையில் யார் ஒருவர் ராமநாமத்தை ஜெபிக்கிறார்களோ, அவர்களிடம் ஆஞ்சநேயர் நெருங்கிவிடுவார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இறை அவதாரங்களில் ஆஞ்சநேயருக்கு மட்டுமே இந்த சிறப்பு உண்டு.
எனவே வைணவத் தலங்களுக்கு வழிபாடு செய்யச்செல்லும் போது, மறக்காமல் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.
ஆஞ்சநேயர் வழிபாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் அர்த்தம் பொதிந்துள்ளது. அந்த தார்ப்பயத்தை அறிந்து, உணர்ந்து நாம் ஆஞ்சநேயரை வழிபாடு செய்தல் வேண்டும்.
பெரும்பாலும் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
எப்போதும் ராமருக்கு சேவை செய்து கொண்டிருந்த ஆஞ்சநேயருக்கு களைப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உளுந்து தானியத்தில் அஞ்சனாதேவி வடை தயாரித்து கொடுத்தாள்.
இதனால் தான் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றும் பழக்கம் ஏற்பட்டது.
வெற்றிலை மாலை வழிபாடு, வெண்ணை காப்பு அலங்காரம் ஆகியவையும் பக்தர்களால் ஆஞ்சநேயருக்கு விரும்பி செய்யப்படுகிறது.
இலங்கை அசோகவனத்தில் தன்னை சந்திக்க வந்த அனுமனை வாழ்த்தி அருகில் இருந்த வெற்றிலையைப்பறித்து சீதை மாலையாக அணிவித்தார்.
அன்று முதல் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிப்பது வழக்கமாகி விட்டது.
அதுபோல ராமரின் ஆயுள் பலத்துக்காக நெற்றியில் செந்தூரம் பூசுவதாக சீதாதேவி கூறியதை கேட்ட ஆஞ்சநேயர், "என் பிரபு ராமனின் ஆயுள் கூடுமென்றால் நானும் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக்கொள்வேன்" என்று பூசிக்கொண்டார்.
இதில் இருந்தே ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது.
சனி, செவ்வாய்க்கிழமை களில் ஸ்ரீராமஜெயம் கூறி ஆஞ்சநேயருக்கு செந்தூரம் சாற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.