ஆன்மிக களஞ்சியம்

சங்கு பிறப்பின் கதை

Published On 2024-09-26 11:28 GMT   |   Update On 2024-09-26 11:28 GMT
  • சங்கில் 16 வகை சங்குகள் இருந்தாலும் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு, திருகு சங்கு ஆகிய 3 வகை சங்குகள் முக்கியமானவை.
  • இதில் இடம் புரி சங்குகள் அதிகமாக கிடைக்கும். லட்சத்தில் ஒரு சங்குதான் வலம்புரி சங்காக இருக்கும்.

சங்கின் பிறப்புக்கு தேவி மகாத்மியத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது......

கிருஷ்ணரின் மகனாக சுதர்மன் என்பவன் அவதரித்தான். ராதையின் சாபம் காரணமாக இவன் அசுரகுலத்தில் சங்கசூடன் என்ற பெயரில் பிறக்க நேரிட்டது.

சங்கசூடன் தான் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான்.

இதனால் சிவபெருமான் அவனை சூலத்தால் அழித்து சாம்பலாக்கினார். அவனது எலும்புகள் தான் ஆழ்கடலில் விழுந்து சங்குகளாக மாறியதாக சொல்கிறார்கள்.

சங்கில் 16 வகை சங்குகள் இருந்தாலும் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு, திருகு சங்கு ஆகிய 3 வகை சங்குகள் முக்கியமானவை.

இதில் இடம் புரி சங்குகள் அதிகமாக கிடைக்கும். லட்சத்தில் ஒரு சங்குதான் வலம்புரி சங்காக இருக்கும்.

ஆலயங்களில் சாதாரணமாக செய்யப்படும் சங்கு, சப்தாகர்ஷண சக்தி பூஜைகளில் இடம்புரி சங்கையே பயன்படுத்துவார்கள்.

திருகு சங்குகள் திருஷ்டி போக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் பயன்படும்.

வலம்புரி சங்கு புனிதமும் ஆற்றலும் நிறைந்தது. இடது கையால் பிடிக்க தகுந்த அமைப்புடன் இருப்பது வலம்புரி சங்காகும்.

Similar News

கருட வசனம்