ஆன்மிக களஞ்சியம்

சர்வ வல்லமை கொண்ட சுதர்சன சக்கர வழிபாடு

Published On 2024-09-24 10:59 GMT   |   Update On 2024-09-24 10:59 GMT
  • யந்திர பூஜையைக் கடைப்பிடிப்போர், ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் தத்துவத்தை மகா யந்திரங்களில் தியானித்து வழிபடுகிறார்கள்.
  • மனதை செலுத்தி, அதற்கு திருமஞ்சனம், அர்ச்சனை முதலியவற்றால் வழிபட்டு பயன் பெறுகிறார்கள்.

சுதர்சன சக்கர யந்திர அமைப்பு இரு வகையானது. செப்புத் தகட்டில் வரி வடிவிலேயே முக்கோணம், ஷட்கோணம் போன்ற கோண அமைப்புகளில் ஸ்ரீசுதர்சன வடிவை வழிபடலாம். இது ஒரு முறை.

இன்னொன்று சக்கரத்தில் ஸ்ரீசுதர்சனரின் வடிவை உள்ளடக்கிய விக்கிரக ஆராதனை வழிபாடு.

இந்த இரண்டு வகைகளிலும் சுதர்சனரை வழிபட இயலாமல் போனால், சுதர்சனரை மனக் கண்ணில் இருத்தி, அவரின் பல்வேறு மந்திரங்களை தூய்மையான மனதுடன் சொல்லி வழிபடலாம்.

உடலும் உள்ளமும் சுத்தமான சூழ்நிலையில் இந்த மந்திரங்களை உச்சரிப்பது, நிறைவான பலனை அளிப்பதோடு மனதுக்கு அமைதியையும் கொடுக்கும்.

பகவான் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக, சிலை வடிவம் தாங்கி இந்த பூலோகத்தில் தோன்றினார்.

விக்ரக வழிபாடு முறையில் பகவானை நன்கு அலங்கரித்து அவனது அற்புற அழகிலே லயித்து, அவனது ஆயிரத்தெட்டு நாமாக்களினால் அர்ச்சித்து, ஆராதித்து ஆத்ம சாந்தியைப் பெறுகிறார்கள்.

அதுபோல், பகவான் மந்திர ரூபமாகவும், யந்திர ரூபமாகவும் உருவெடுத்தான். சிலை உருவை வீட்டில் வைத்து வழிபட இயலாதவர்களும் தன்னை வழிபட ஏதுவாக யந்திர உருவம் தாங்கினான் பகவான்.

அதனால், பக்தி சிரேஷ்டர்கள் பகவானை விக்ர ரூபமாகவும், மகா யந்திரத்தின் ரூபமாகவும், சாளக்கிராம ரூபமாகவும் வழிபடுகிறார்கள்.

யந்திர பூஜையைக் கடைப்பிடிப்போர், ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் தத்துவத்தை மகா யந்திரங்களில் தியானித்து வழிபடுகிறார்கள்.

மனதை செலுத்தி, அதற்கு திருமஞ்சனம், அர்ச்சனை முதலியவற்றால் வழிபட்டு பயன் பெறுகிறார்கள்.

மகாசுதர்சன யந்திரத்தை முறையாக வழிபடுவோர், எவ்விதமான இன்னல்களுமற்று, சகல சவுபாக்கியங்களுடன், இன்பமாக வாழ்கிறார்கள்.

ஸ்ரீசுதர்சன உபாசனை வீரம் அளிப்பது. தீர்க்க முடியாத நோய்களும், சுதர்சனரின் கடாட்சத்தால் நீங்கப் பெறும்.

போர்முனையில் வெற்றித் திருமகளின் கடாட்சத்தைப் பெறுவதே, தமது லட்சியமாகக் கொண்ட வீரவாழ்வு வாழ்ந்த பல மாமன்னர்கள், சுதர்சன உபாசனை செய்தவர்களாகவே இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

கருட வசனம்