திருப்பதிக்கு அளப்பரிய பணியாற்றிய ராமானுஜர்
- சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார்.
- இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரிய பட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.
ஏழுமலை ஏறித் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கவும் ராமானுசர் ஏற்பாடு செய்தார். அதுவே "ராமானுசக் கூடம்" ஆனது.
இன்றும் அங்கு பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக அன்றே "சமபந்தி" சாப்பாட்டை ராமானுசர் தொடங்கி வைத்து விட்டார். ஏழுமலையான் மார்பில் திருமகள் திருமேனியைத் தொங்க விட்டவரும், ராமானுசரே!
ஏழுமலையானுக்குப் பச்சைக் கற்பூர நாமம் சாத்தவும் ராமானுசரே ஏற்பாடு செய்தார்.
சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார்.
இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரிய பட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.
வெள்ளி தோறும் திருமஞ்சனக் காப்பு நடத்தவும், அலங்காரம் செய்யும் முறையையும், நித்திய பூசையையும் ராமானுசர் வகுத்துக் கொடுத்தார். மலை அடிவாரத்தில் கீழ்த் திருப்பதி ஊரையும் உருவாக்கினார்.
இப்படி ஏழுமலையான கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுசர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது.
ராமானுசர் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் விழா கொண்டாடுகிறார்கள்.