ஆன்மிக களஞ்சியம்

துளசியின் வழிபாடும் பலன்களும்

Published On 2024-09-26 11:13 GMT   |   Update On 2024-09-26 11:13 GMT
  • துளசியை ஒவ்வொரு துவாதசி திதி தினத்தன்றும் பிரம்மனே பூஜை செய்கிறார்.
  • எனவே யார் ஒருவர் துளசியை பூஜித்து வருகிறாரோ அவர்களது பாவம் விலகி விடும்.

துளசியின் நுனியில் பிரம்மா, அடியில் சிவபெருமான், மத்தியில் விஷ்ணு விசிக்கின்றனர்.

12 ஆதித்தியர்கள், 11 ருத்ரர்கள், 8 வசுக்கள் மற்றும் அக்னி தேவர்கள் வாசம் செய்கின்றனர். துளசி இலை பட்ட தண்ணீர் கங்கைக்கு சமமாக கருதப்படுகிறது.

துளசியை ஒவ்வொரு துவாதசி திதி தினத்தன்றும் பிரம்மனே பூஜை செய்கிறார்.

அது போல மற்ற தேவர்களும் பூஜிக்கிறார்கள். எனவே யார் ஒருவர் துளசியை பூஜித்து வருகிறாரோ அவர்களது பாவம் விலகி விடும்.

துளசியில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளது.

தினமும் 10 துளசி இலையை சாப்பிட்டால் ரத்தம் சுத்தமாகும். துளசி சாறுக்கு பார்வை குறைபாடுகளை நீக்கும் சக்தி உண்டு.

துளசி தீர்த்தம் வயிற்றுக் கோளாறுகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் போக்கும். ஜீரண சக்தி மேம்படும். இதயம், கல்லீரல் சீராக செயல்படும்.

வீட்டில் துளசி வளர்ப்பதால் சுத்தமான காற்றை நாம் பெற முடியும். புகை மற்றும் மாசுவை தூய்மைப் படுத்தும் ஆற்றல் துளசிக்கு உண்டு.

எனவே அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் துளசி உயர்வானது. புனிதமானது.

ஈடு இணையற்றது. இத்தகைய சிறப்புடைய துளசியை வைணவத் தலங்களுக்கு செல்லும் போது மறக்காமல் வாங்கிச் செல்ல வேண்டும்.

துளசி சார்த்தி நீங்கள் வழிபடும் போது பெருமாளின் அருளை மிக எளிதாகப் பெற முடியும்.

அது மட்டுமின்றி மகா விஷ்ணுவின் வைகுண்டத்துக்கு சென்று மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ வழி ஏற்படும்.

துளசி வழிபாடு செய்யும் இளம் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். செல்வம் சேரும்.

Similar News

கருட வசனம்