ஆன்மிகம்

முசிறி சந்திர மெளலீஸ்வரர் கோவிலில் பைரவர் சிறப்பு வழிபாடு

Published On 2016-11-08 09:15 GMT   |   Update On 2016-11-08 09:15 GMT
முசிறி சந்திரமெளலீஸ்வரர் கோவிலில் அஷ்டமி தினத்தன்று பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
முசிறி சந்திரமெளலீஸ்வரர் கோவிலில் அஷ்டமி தினத்தன்று பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பைரவர் சன்னதியில் உள்ள பைரவருக்கு பால், தயிர், தேன், இளநீர் மற்றும் வாசனைத்திரவியங்கள் மூலம் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மிளகு சாதம், தயிர்சாதம் படையலிடப்பட்டு வெண்பூசணி மற்றும் தேங்காய் மூடிகளில் வேப்பஎண்ணெய் மூலம் விளக்குகள் போடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளை கோவில் குருக்கள் மாணிக்கசுந்தர சிவாச்சாரியார் தலைமை தாங்கி நடத்தினார். பூஜைகளில் முசிறி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில், திருத்தலையூர் சப்தரிஸ்வரர் கோவில், த.புத்தூர் காசிவிஸ்வநாதர் கோவில், ஆமூர் ரவீஸ்வர சுவாமி கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் அஷ்டமி தினத்தன்று பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகளில் பெண்கள், குழந்தைகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளுக்குப்பின் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டன்விளை தெற்கு தெரு பொது மக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து உள்ளனர்.

Similar News