குழந்தை பராமரிப்பு

குழந்தைகளை பாதிக்கும் டெங்கு காய்ச்சல்

Published On 2022-08-25 05:03 GMT   |   Update On 2022-08-25 05:03 GMT
  • பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் மட்டுமே இந்த காய்ச்சல் ஏற்படுகிறது.
  • டெங்கு காய்ச்சல் அதிகம் குழந்தைகளையே குறி வைக்கிறது.

குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதிலிருந்து குணமாகும் வழிமுறைகள், கையாள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பாளையங்கோட்டை யைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் வே.த. ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

ஏடீஸ் (Aedis) கொசுக்களால் பரப்பப்படும் ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் டெங்கு காய்ச்சல். இதில் 4 வகை வைரஸ்கள் உண்டு.

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு அடிக்கடி நீராகாரங்களையும், தண்ணீரையும் கொடுத்து கொண்டிருக்க வேண்டும். வாந்தி வருவதாக இருந்தாலும் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?

ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக்கரைசல், இளநீர், பழச்சாறுகள், பால், கஞ்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் மட்டுமே இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே பகல் நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். வீடுகள், தெருக்களில் சுத்தமான தண்ணீர் நாள்படத் தேங்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சலால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

டெங்கு காய்ச்சல் வந்த 4 அல்லது 5 நாள்களில் சிலருக்கு மட்டுமே ஷாக் சின்ட்ரோம் விளைவுகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள நீர் பிளாஸ்மா ரத்தக்குழாயை விட்டு திசுக்களுக்கு இடையே கசிவதால் ரத்த நாளங்களில் உள்ளே இருக்கும் ரத்தத்தின் அளவும், நீர்த் தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் ரத்தம் ஓட்டம் குறைபடுவதுடன் ரத்த அழுத்தமும் குறைகிறது.

டெங்கு காய்ச்சல் பாதிக் கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீராகாரங்களை கொடுத்து, உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவதன் மூலம் குணம் பெற முடியும்.

மழைக்காலங்களில் கொசு தொல்லையுடன் டெங்கு காய்ச்சலும் பரவும் அபாயம் உள்ளது. டெங்கு காய்ச்சல் அதிகம் குழந்தைகளையே குறி வைக்கிறது.

குழந்தைகள் மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவமனை, குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம், 59, திருவனந்தபுரம் சாலை, பாளை யங்கோட்டை. தொலைபேசி: 0462- 2560783, 2570783.

Tags:    

Similar News