null
குழந்தைக்கு டயப்பர் அணிவிப்பது பாதுகாப்பானதா?
- காட்டன் டயப்பர்கள் குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகளின் தோலுக்கு எந்தவித கெடுதலும் இருக்காது.
- அதிக செயற்கை பொருட்களாலான டயப்பர்களை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்.
குழந்தைகளுக்கு டயப்பர் அணிவது பெற்றோர்களுக்கு சவுகரியமான செயல் என்றாலும் அந்த டயப்பரால் சில தீமைகளும் இருக்கின்றன.
அதிக செயற்கை பொருட்களாலான டயப்பர்களை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும்.
ஈரமான டயப்பர்கள், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களையும், சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள் அதிகரிக்கவும் வழி வகுக்கின்றன.
காட்டன் டயப்பர்கள் குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகளின் தோலுக்கு எந்தவித கெடுதலும் இருக்காது. அதை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால் கெமிக்கல் கலந்த மாடர்ன் டயப்பர் அணிவிப்பது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகள் முடிவுகள் தெரிவித்துள்ளன.
மாடர்ன் டயப்பர்களில் ஒரு சில விஷப்பொருட்கள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அது குழந்தைகளின் உடல்நலனை பெரிதும் பாதிக்கும் என்றும் குறிப்பாக சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது
எனவே வேதிப்பொருள்கள் பயன்படுத்தாத சுத்தமான காட்டன் டைப்பர்கள் பயன்படுத்தினால் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. அது மட்டுமின்றி அடிக்கடி டயப்பரை மாற்ற வேண்டும்.
ஈரம் கசிந்தால், டயப்பர் கனமாக தெரிந்தால், குழந்தை மலம் கழித்துவிட்டால், துர்நாற்றம் வருகையில், குழந்தை விடாத அழுது கொண்டிருந்தால் டயப்பர்களை உடனே மாற்ற வேண்டும். குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.