- ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் இந்தியாவில் மரணம் அடைகிறார்கள்.
- ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள்.
இந்தியாவுக்கு 'இளமையான நாடு' என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொறுத்தவரை இந்தியாவுக்கு சாதகமான நிலைதான் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது, சீனாவை விட இந்தியா இளமையாகத்தான் இருக்கிறது. இது மகிழ்ச்சி தந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4 லட்சம் குழந்தைகள், பிறந்த 24 மணி நேரத்துக்குள் இறந்து போவதாக சர்வதேச அமைப்பான 'சேவ் த சில்ரன்' கூறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 2 லட்சம் பேர் இந்தியாவில் மரணம் அடைகிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் சரியான உணவு இல்லாததுதான்.
2008-ம் ஆண்டு தகவலின்படி இந்தியாவில் 800 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். வளர்ந்த நாடுகள் அனைத்திலும் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது.
இந்தியாவில் 45 கோடி பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். அப்படி இருந்தும் கூட மொத்த பட்ஜெட்டில் குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.
எனவே நிதியை இன்னும் அதிகப்படுத்தி குழந்தைகள் நலத்திட்டங்களையும், அவர்களுக்கு சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்காமல் இல்லை. எனவே இதுசம்பந்தமான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டியது அவசியமானது.