லைஃப்ஸ்டைல் (Health)

சமூக வலைதளத்தில் தோழிகளிடம் பழகும் முறை

Published On 2018-09-04 08:44 GMT   |   Update On 2018-09-04 08:44 GMT
சமூக வலைதளத்தில் அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் பழகுவது அனைவருக்கும் கடினம். அதையும் தாண்டி, நீங்கள் சமூக ஊடகங்களில் பெண் தோழிகளை சந்திக்க சிலவழிமுறைகள் உள்ளன.
முன்பெல்லாம், ஒருவருடன் பழக வேண்டும் என்றால், அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் பேசி, அதன்பின் அவர்களுடன் பழக வேண்டியிருந்தது. ஆனால், தற்போது இருக்கும் சமூக ஊடகங்கள் இந்த சுமைகளை குறைத்துள்ளது. இருப்பினும், அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் பழகுவது அனைவருக்கும் கடினம். அதையும் தாண்டி, நீங்கள் சமூக ஊடகங்களில் பெண் தோழிகளை சந்திக்க சில டிப்ஸ்கள் இதோ

உங்களுக்கு அறிமுகம் இல்லாத, எந்த வகையிலும் தொடர்பில்லாதவரை தொடர்பு கொள்வது மிகவும் தவறானது. உங்கள் நண்பரின் தோழி அல்லது, உங்கள் சமூகத்தில் இருப்பவர் என உங்களுடன் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்புடையவரை தொடர்பு கொள்ளுங்கள்

அவரை சமூக ஊடகத்தில் நண்பர் ஆக்கிவிட்டீர்கள் எனில், அவருக்கு ஒரு ஹாய், ஹலோ என மெசேஜ் செய்து உரையாடலைத் தொடங்குங்கள். அவர் பதில் பதிவு செய்யும் வரை காத்திருங்கள். சில நாட்களுக்குப் பிறகும் பதில் பதிவு செய்யவில்லை என்றால், அவரை விட்டு விலகுங்கள்

அவர் பதில் பதிவு செய்தால், உடனடியாக அவருக்கு நிறைய மெசேஜ் செய்து தொந்தரவு செய்யாதீர்கள். அவர் ஒரு மெசேஜ் செய்தால், அதற்கு பத்து மெசேஜ் பதில் பதிவு செய்வது போன்றவற்றை தவிர்த்திடுங்கள். அப்போதுதான் உங்கள் மீது ஒரு நன்மதிப்பு வரும்

உங்களுக்கு அவர் மெசேஜ் செய்வது பாதுகாப்பானது என்பதை உணரச் செய்யுங்கள். அவருக்கு அடிக்கடி மெசேஜ் செய்து தொந்தரவு செய்வது, உங்களை ஆபத்தானவர் என்பதைப் போல் காட்டும். பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

பெண் தோழிக்கு மெசேஜ் செய்யும் போது நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். இரண்டு அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். தெரியாத விஷயங்களை பற்றி பொய் சொல்லாதீங்க. அதே போல் தெரிந்த விஷயங்களையும் அளவுடன் பேசுங்க. அப்போது உங்களது நட்பு எந்த பிரச்சனையும் இல்லாமல் பல காலங்கள் தொடரும். நட்பும் நிலைத்திருக்கும்.
Tags:    

Similar News