இந்தியா

'படிக்கட்டில் நிக்காதீங்க' என்று சொன்ன பஸ் கண்டக்டருக்கு கத்திக்குத்து.. அலறியடித்த பயணிகள் - வீடியோ

Published On 2024-10-02 06:00 GMT   |   Update On 2024-10-02 08:34 GMT
  • தான் வைத்திருந்த கத்தியை உருவி கண்டக்டர் யோகேஷின் அடிவயிற்றில் குத்தியுள்ளார்.
  • பஸ்சில் பயணித்த மற்ற பயணிகளையும் அவர் கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார்.

கண்டக்டருக்குபடிக்கட்டில் நிற்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கிய பஸ் கண்டக்டரை பயணி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று [செவ்வாய்க்கிழமை] மாலை அரசு [BMTC] பஸ்ஸில் ஏறிய ஹர்ஷ் சின்ஹா [Harsh Sinha] என்ற 25 வயது இளைஞர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார். இதனைக் கவனித்த பஸ் கண்டக்டர் யோகேஷ் [45 வயது] படிக்கட்டில் நிற்காமல் உள் வரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால் கண்டக்டர் சொல்வதைக் கேட்காமல் அவருடன் இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தான் வைத்திருந்த கத்தியை உருவி கண்டக்டர் யோகேஷின் அடிவயிற்றில் குத்தியுள்ளார். மேலும் பஸ்சில் பயணித்த மற்ற பயணிகளையும் அவர் கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். கத்தியைக் காட்டி மிரட்டி அனைவரையும் பஸ்சில் இருந்து இறங்கவைத்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார்.

பஸ் ஓட்டுநர் சம்யோஜித்தாக பஸ்சின் ஆட்டோமேட்டிக் கதவை லாக் செய்துவிட்டு வெளியே குதித்த பின்னர் உள்ளே மாட்டிக்கொண்ட அந்த இளைஞர் கோடரியால் பஸ்சை சேதப்படுத்தியுள்ளார். ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள வைதேகி சர்க்கிள் என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் இந்த சம்பவம் நடந்த நிலையில் உடனே அங்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.

மேலும் கத்தியால் தாக்கப்பட்ட கண்டக்டர் ரத்தம் ஒழுகிய நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸ் விசாரணையில் இளைஞர் ஹர்ஸ் சின்ஹா ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் பெங்களூரில் கால் சென்டரில் வேலை பார்ப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

Tags:    

Similar News