செய்திகள் (Tamil News)

சட்டசபையில் டி.டி.வி.தினகரன் பற்றி அ.தி.மு.க. புகழாரம்: தி.மு.க. கடும் எதிர்ப்பு

Published On 2017-03-22 09:39 GMT   |   Update On 2017-03-22 09:39 GMT
சட்டசபையில் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் புகழ்ந்து பேசியதால், தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
சென்னை:

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. 16-ம் தேதி நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டு 20-ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. மேலும், முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளும் எழுப்பப்பட்டு, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

இன்றைய விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தூசு மோகன் (அ.தி.மு.க.) பேசுகையில், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை புகழ்ந்து விட்டு ஆர்.கே.நகரில் டி.டி.வி.தினகரன் தான் வெற்றி வீரர் என்று குறிப்பிட்டார். இதற்கு கே.பி.பி.சாமி (தி.மு.க.) கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

‘எங்கள் வேட்பாளர்தான் வெற்றி வீரராக வலம் வருவார்’ என்றார் சாமி. அவருக்கு ஆதரவாக மற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் குரல் கொடுத்தனர். இதனால் சட்டசபையில் லேசான சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது.

Similar News