அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக முயற்சி: திருமாவளவன் பேட்டி
திருச்சி:
திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காமராஜர் பிறந்தநாளையொட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வி தொடர்பான அதிகாரத்தை மாநில பட்டியலில் இணைக்க வேண்டும். இந்தியா முழுவதும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். காவல் துறையில் போதிய ஜனநாயக உரிமை இல்லை. 8மணி நேர பணியை உறுதிப்படுத்த வேண்டும். வார விடுமுறைக்கு அனுமதிக்க வேண்டும்.
ஊழல் தொடர்பாக தமிழக முதல்வர் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கையை வெளியிட வேண்டும். ஊழலை ஒழிப்போம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசு , அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த 4 ஆண்டுகளாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. திருத்தம் மட்டுமே செய்துள்ளார்கள் .
டி.டி.வி. தினகரன் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளரை அறிவித்து பேசியதற்கு வாழ்த்துக்கள். காந்தி மார்க்கெட் வெங்காயமண்டி தொழிலாளர்கள் 260 பேரின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து அரசு, மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ஜ.க.வினர் அ.தி.மு.க.வை பலவீன படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவருக்கும் இடையே இடைவெளி ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #admk #bjp