செய்திகள் (Tamil News)

வீடியோ: டெஸ்டிங்கில் சிக்கிய 2018 சான்ட்ரோ

Published On 2018-01-05 11:23 GMT   |   Update On 2018-01-05 11:33 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது.
புதுடெல்லி:

ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய ஹேட்ச்பேக் மாடல் AH2 என்ற பெயரில் சோதனை செய்யப்படுகிறது. புதிய ஹேட்ச்பேக் ஸ்பை படங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், முதல் முறையாக டெஸ்டிங் செய்யப்படும் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. 

நெடுஞ்சாலையில் சோதனை செய்யப்படும் புதிய சான்ட்ரோ எவ்வித மறைப்பும் இன்றி சோதனை செய்யப்படுகிறது. உயர்ந்த வடிவமைப்பு மிக தெளிவாக காட்சியளிக்கிறது. இதில் டெயில் லேம்ப், ஹெட்லேம்ப் மற்றும் ORVM உள்ளிட்டவை காணப்படுவதால் தயாரிப்பு பணிகள் நெருங்கி விட்டதை அறிந்து கொள்ள முடிகிறது. 

முழுமையாய் தயாரிக்கப்பட்ட மாடலை ஹூன்டாய் நிறுவனம் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகியிருக்கும் வீடியோவில் காரின் இன்டீரியர் காணப்படுகிறது. இதில் வாகனத்தின் தகவல்களை படிக்க பெரிய திரை வழங்கப்பட்டிருக்கிறது. 



இத்துடன் புதிய மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் புதிய மாடலில் பல்வேறு புதிய அம்சங்களும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஃபேப்ரிக் சீட், பாதுகாப்பு அம்சங்களான டூயல் ஏர்பேக்ஸ், ABS, EBD மற்றும் ISOFIX உள்ளிட்டவை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

வெளிப்புறத்தில் எல்இடி டி.ஆர்.எல். கொண்டிருக்கும் என்றும் வடிவமைப்பு, தற்போதைய ஹூன்டாய் வாகனங்களில் உள்ளதை போன்று காட்சியளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்க கிரிள் டிரேப்சோடியல் மற்றும் க்ரோம் ஸ்லாட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 0.8 லிட்டர் இன்ஜின் மற்றும் 1.0 லிட்டர் இன்ஜின் மற்றும் AMT அம்சம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் டெஸ்டிங் செய்யப்படும் ஹூன்டாய் சான்ட்ரோ வீடியோவை கீ்ழே காணலாம்..,



புகைப்படம்: ரஷ்லேன்

Similar News