செய்திகள்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹேந்திரா S201

Published On 2018-07-31 12:27 GMT   |   Update On 2018-07-31 12:27 GMT
மஹேந்திரா நிறுவனத்தின் S201 காம்பேக்ட் எஸ்.யு.வி. இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Mahindra


மஹேந்திரா நிறுவனம் இந்தியாவில் 4மீட்டர் அளவில் சிறிய எஸ்யுவி மாடலை சோதனை செய்யப்படுகிறது. இந்த கார் S201 என்ற குறியீட்டு பெயரில் சோதனை செய்யப்படுகிறது. புதிய S201 சங்யோங் டிவோலி மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களின் படி இந்த எஸ்.யு.வி. உற்பத்திக்கு தயாரான நிலையில் காணப்படுகிறது.

புதிய கார் குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படாத நிலையில், மஹேந்திராவின் புதிய S201 பண்டிகை காலத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, டாடா நெக்சன் மற்றும் ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் பின்பு ஃபாக் லேம்ப்கள் பம்ப்பரில் அழகாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் சிறப்பான வடிவமைப்பு கொண்டுள்ளது. இந்தியாவில் தற்சமயம் சோதனை செய்யப்படும் காரில் அப்போலோ அல்னாக்ஸ் டையர்களை கொண்டுள்ளது. புதிய மஹேந்திரா S201 கார் சென்னையில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.



பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களை கொண்டிருக்கும் மஹேந்திரா S201 புதிய தலைமுறை 1.5 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் மோட்டார்களை கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின்கள் சாங்யோங் மற்ரும் மஹேந்திரா நிறுவனங்கள் இணைந்து தயாரித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளியான ஸ்பை படங்களில் சிறிய எஸ்.யு.வி. மாடலின் உள்புறத்தை வெளிப்படுத்தின. அதன்படி உள்புறம் கருப்பு மற்றும் சில்வர் அக்சென்ட்கள் கொண்டுள்ளது. இதன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சி்ஸ்டம் இரண்டு, செங்குத்தான ஏ.சி. வென்ட்கள் மற்றும் பியானோ பிளாக் நிற பெசல் மூலம் சூழப்பட்டுள்ளது. இதன் ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் சிவப்பு நிற பட்டன்களை கொண்டு பல்வேறு ஆப்ஷன்களை வழங்குகின்றன.  

புகைப்படம் நன்றி: Rushlane
Tags:    

Similar News