உள்ளூர் செய்திகள்

கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மரக்கன்றுகள் நட்ட காட்சி.

கோவில்பட்டி அருகே ஜமீன் தேவர்குளம் கிராமத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

Published On 2022-07-06 09:07 GMT   |   Update On 2022-07-06 09:07 GMT
  • ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
  • முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன் தேவர்குளத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் வசந்த் ஆகியோருக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலத்தில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சத்யா, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத்தலைவர் பழனிச்சாமி, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் தாமோதரன், பண்ணை வடிவமைப்பாளர் ரகுராமன், ஈஷா மைய தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசி ராஜன், தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லிங்கத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். நில உரிமையாளர்கள் கார்த்திகேயன், வசந்த் ஆகியோர் வரவேற்றனர்.

Tags:    

Similar News