10-ம் வகுப்புபொது தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 89.60 சதவீதம் தேர்ச்சி
- 10-ம் வகுப்புபொது தேர்வு முடிவுகள் வெளியானது. கடலூர் மாவட்டத்தில் 89.60 சதவீதம் பேர் தேர்ச்சி ெபற்றுள்ளனர்.
- கடலூர் மாவட்டத்தில் 231 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 15,227 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர்.
கடலூர்:
தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 34,391 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 17,834 பேரும், மாணவிகள் 16,557பேரும் அடங்குவர்.இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 30,816 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். அதாவது மாணவர்கள் 15,274 பேரும், மாணவிகள் 15,542 பேரும் வெற்றி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதம் 89.60 சதவீதம் ஆகும்.
கடலூர் மாவட்டத்தில் 231 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் 15,227 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியானதில் 12,877 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி விகிதம் 84.57 சதவீதம் ஆகும். கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்.