நீலகிரியில் 19 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
- பிளாஸ்டிக் பொருள் வைத்திருந்ததற்காக ரூ.79 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- ஒரு கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊட்டி
தமிழக அரசு ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பினாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில்,ஓட்டல், பேக்கரி, உணவகங்கள், வணிக வளாகங்கள், பார்கெட் ஆகிய பகுதிகளில் தடைசெய்யப்ட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு மேற்கொண்டதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 15 கிலோ பறிமுதல் செய்யபட்டு ரூ.55,000 அபராதம் விதித்தனர். குன்னூர் வட்டாட்சியர் தலைமையில், 2 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.4,500அபராதம் விதித்தனர்.
உதகை நகராட்சி ஆணையாளர் தலைமையில், 1 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.5,000 அபராதம் விதித்தனர். குன்னூர் நகராட்சி ஆனையாளர் தலைமையில், 300 கிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.7,000 அபராதம் விதித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர்களின் ஆய்வில் ஒரு கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ. 7.500 அபராதம் விதித்தனர். ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில், 100 கிராம் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.500 அபராதம் விதித்தளர்,
நீலகிரி மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 19.400 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு, அக்கடைகளுக்கு 25.11.2022 மற்றும் இன்று 26.11.2022 அபராத தொகையாக மொத்தம் ரூ.79,600 விதிக்கப்பட்டது. மேலும், தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதனை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.