உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் மர்மவிலங்கு கடித்து 2 ஆடுகள் சாவு

Published On 2022-10-05 10:05 GMT   |   Update On 2022-10-05 10:05 GMT
  • ேதாட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
  • ஆடுகள் சிறுத்தை தாக்கி இறந்ததா? அல்லது வேறு வனவிலங்குகள் தாக்கி இறந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்

கவுண்டம்பாளையம்

கோவை ஆனைகட்டி அடுத்த காளையனூரை சேர்ந்தவர் விஜயன்(63). இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. தோட்டத்தில் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார்.

நேற்று இரவு இவரது ேதாட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதை பார்த்து விஜயன் அதிர்ச்சி அடைந்தார். ஆடுகள் எதனால் இறந்திருக்கும் என யோசித்தார்.

சிறுத்தை தாக்கி இறந்ததா? அல்லது வேறு விலங்குகளா இருக்கலாம் எனவும் நினைத்தார். இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு கூடினர்.

மேலும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று வனத்தை விட்டு வெளியில் வந்து தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த ஆடுகளை அடித்து கொன்றுள்ளது. இந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களை பார்த்தனர். வனத்துறையினர் கூறும்போது தோட்டத்தில் ஆடுகள் சிறுத்தை தாக்கி இறந்ததா? அல்லது வேறு வனவிலங்குகள் தாக்கி இறந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News