கொடைக்கானல் தாறு மாறாக ஓடிய கார் மோதி 2 பேர் படுகாயம்
- அதிகமான போதை யில் காரை இயக்கியதால் ஏரிச்சாலை கலையரங்கம் பகுதியை ஒட்டிய சாலை ஓர நடைமேடையில் தாறு மாறாக ஓடியது.
- போலீசார் விபத்து ஏற்படுத்திய டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
நாகர்மாகோவில் அருகே மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கொடைக்கானலுக்கு காரில் வந்தார். அதிகமான போதை யில் காரை இயக்கியதால் ஏரிச்சாலை கலையரங்கம் பகுதியை ஒட்டிய சாலை ஓர நடைமேடையில் தாறு மாறாக ஓடியது.
இதில் சாலையோரம் நின்றிருந்த பத்துக்கும் மேற்பட்ட வாடகை சைக்கி ள்கள், இருசக்கர வாகனம், அங்கு நின்றிருந்த புகை ப்படக்காரரின் பிரிண்டர் மெஷின் ஆகியவை மீது மோதியது. மேலும் சாலை யோர சோளவியாபாரியான லட்சுமி (45) என்ற பெண், வேலூர் மாவட்டம் குடியா த்தம் பகுதியை சேர்ந்த நளினி (36) என்ற சுற்றுலா பயணி ஆகியோர் மீதும் மோதியதால் அவர்கள்படு காயம் அடைந்தனர். உடன டியாக அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து 2 பேரையும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கொடைக்கானல் போலீசார் விபத்து ஏற்படு த்திய சுரேசை கைது செய்து அவர் ஓட்டி வந்த காரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
ஏரிச்சாலை முழுவதும் சில மாதங்களுக்கு முன் சாலையோர ஆக்கிர மிப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலை துறையால் அகற்றப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் தள்ளுவண்டிக் கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளால் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.