தேசிய ஊரக வேலை திட்டத்தில் முறைகேடு பணித்தள பொறுப்பாளர்கள் 2 பேர் மீது வழக்கு
- பணிக்கு வந்தவர்களை வேலை இடங்களில் புகைப்படம் எடுத்து மின் பொருள் செயலியில் தினமும் காலை 9மணிக்கு பதிவேற்றம் செய்துள்ளனர்.
- முன்னாள் பணித்தள பொறுப்பாளர்கள் 2 பேர் செயலியில் நுழைந்து பணிக்கு வந்த வர்களுக்கு ஆப்சென்ட் எனவும், பணிக்கு வராத வர்களுக்கு பிரசென்ட் என முறைகேட்டில் ஈடுபட்டனர்.
தேனி:
தேனி மாவட்டம் திருமலாபுரம் ஊராட்சியில் கடந்த பிப்ரவரி, மார்ச்சில் தனியார் காளவாசல் முதல் மாலப்பட்டி வரை வாய்க்கால் சீரமைப்பு மந்தையம்மன் கோவில் முதல் கருப்பத்தேவன்பட்டி, காமாட்சிதேவன் ஓடை வரத்து வாய்க்கால்கள் சீரமைப்பு பணிகள் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு வாரம் நடந்தது.
இப்பணிக்கு வருவோரின் வருகையை பணித்தள பொறுப்பாளர்கள் பால்கண்ணன், கயல்விழி பதிவு செய்தனர். வேலை நடக்கும் நாட்களில் பணிக்கு வந்தவர்களை வேலை இடங்களில் புகைப்படம் எடுத்து மின் பொருள் செயலியில் தினமும் காலை 9மணிக்கு பதிவேற்றம் செய்துள்ளனர். பதிவேற்றம் செய்த சில நிமிடங்களுக்குள் அச்செயலியில் முன்னாள் பணித்தள பொறுப்பா ளர்கள் அருள்முருகன், மேனகா செயலியில் நுழைந்து பணிக்கு வந்த வர்களுக்கு ஆப்சென்ட் எனவும், பணிக்கு வராத வர்களுக்கு பிரசென்ட் எனவும் மோசடியாக பதிவு செய்து பணிக்கு சம்மந்தமில்லாதவர்களின் புகைப்படத்தை மாற்றி முறைகேட்டில் ஈடுபட்டனர்.
இது குறித்து பி.டி.ஓ. மலர்விழி புகாரின்படி சைபர்கிரைம் இன்ஸ்பெ க்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர் தாமரை க்கண்ணன் ஆகி யோர் அருள்முருகன், மேனகா மீது வழக்குப்பதிவு செய்தனர்.