குள்ளஞ்சாவடியில் காரில் கடத்திய 200 கிலோ போதைபொருட்கள் பறிமுதல்
- அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
- 3பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
கடலூர் :
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, உலகநாதன், ஆகியோர் தலைமையில் போலீசார் குள்ளஞ்சாவடி அருகே பெருமாள் ஏரிக்கரை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது வடலூரில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா சுமோ காரினை வழிமறித்து சோதனை செய்தனர் .அதில் 11 மூட்டை ஹான்ஸ் 5 மூட்டை, கூல் லிப் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் காரில் வந்த இளைஞர்கள் 3பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குறிஞ்சிப்பாடி பாலாஜி (வயது33), வடலூர் ஆபத்தானரணபுரம் பூசாலிக்குப்பம் மகாராஜன் (27), வடலூர் ஆபத்தானரணபுரம் மாரியம்மன் கோவில் தெரு விக்னேஷ் (21)என்பது தெரிய வந்தது இதனைத்தொடர்ந்து 3 பேரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 200 கிலோ, ஹான்ஸ், கூல் லிப் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.