உள்ளூர் செய்திகள்

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் செத்து கிடப்பதை படத்தில் காணலாம்.

கடலூர் கடற்கரையில் வனத்துறையினர் அலட்சியத்தால் 200-க்கும்மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் உயிரிழப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

Published On 2023-03-25 05:52 GMT   |   Update On 2023-03-25 05:52 GMT
  • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டு வந்தனர்.
  • 2நாட்களாக வனத்துறை யினர் அலட்சியத்தால் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது.

கடலூர்:

ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் கடற்கரையோரம் முட்டையிட்டு செல்வது வழக்கம். முட்டைகளை கால்ந டைகள் மற்றும் பறவை இனங்கள் இறையாக சாப்பிடு வதால் வனத்துறையினர் உதவியுடன் கடலூர் சமூக வன ஆர்வலர் செல்லா அதிகாலையில் கடற்கரையோரம் பயணித்து ஆமைகள் விட்டுச்செல்லும் முட்டைகளை சேகரித்து அதனை பராமரித்து குஞ்சுகளை பொறித்த பின்னர் பாதுகாப்பாக கடலில் விட்டு வரும் பணியை கடந்த சில ஆண்டுகளாக சரியான முறையில் செய்து வந்ததால் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். இந்த ஆண்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் கடலூர் கடற்கரையோரம் ஆமைகள் விட்டு சென்ற நிலையில் அதனை பாதுகாப்பாக மீட்டு வனத்துறை அதிகாரி களுடன் வன ஆர்வலர் செல்லா பாதுகாத்து கடந்த ஒரு மாதமாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2நாட்களுக்கு முன்வனத்துறையினர் சமூக வன ஆர்வலரான செல்லாவை பணியில் ஈடுபடக்கூடாது என கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில் 2நாட்களாக வனத்துறை யினர் அலட்சியத்தால் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. இன்று காலை சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆமைக்கு ஞ்சுகள் வெளியே உயிரிழந்து காணப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து, சோகத்துடன் உயிரிழந்த ஆமைக்குஞ்சுகளை சேகரித்து வைத்தனர். இதில் உயிருடன் இருந்த ஆமை குஞ்சுகளை தண்ணீரில் விட்டு பின்னர் கடலில் பாதுகாப்பாக விட்டனர். அரிய வகை ஆமைக்கு ஞ்சுகள் அதனுடைய செயல்பா டுகள் என்னென்ன? என்பதனை வன ஆர்வலர் செல்லா அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை முழுமையாக பாதுகாப்பு படுத்தி வந்த நிலையில், வனத்துறையின் அலட்சியத்தால் 200-க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி அரியவகை ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக மீட்டு அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு வன ஆர்வலர் செல்லாவிற்கு வனத்துறை அதிகாரிகள் எந்தவித காரணமும் இன்றி பணி செய்ய விடாமல் ஏற்படுத்தியதை விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News