செய்திகள் (Tamil News)

மிட்டாய் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை

Published On 2016-07-07 17:49 GMT   |   Update On 2016-07-07 17:49 GMT
தேனி நகரில் உள்ள மிட்டாய் பொருட்கள் மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தேனி:

தேனி நகரில் உள்ள மிட்டாய் பொருட்கள் மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுகுணா தலைமையில், தேனி நகர உணவு பாதுகாப்பு அலுவலர் பாண்டியராஜன் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள மிட்டாய் பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் அருகில் அமைந்துள்ள கடைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது காலாவதியான மிட்டாய்கள், தேதி குறிப்பிடாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த மிட்டாய்கள், அதிக நிறமூட்டப்பட்ட மிட்டாய்கள் என சுமார் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான மிட்டாய் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மிட்டாய்கள் சிறுவர், சிறுமிகள் சாப்பிடும் வகையிலானது. இதில் இருந்து மாதிரிகள் எடுத்து ஆய்வுக்காக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

Similar News