செய்திகள் (Tamil News)

கடலூர் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேர் கைது

Published On 2018-05-18 10:02 GMT   |   Update On 2018-05-18 10:02 GMT
கடலூர் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடலூர்:

கடலூரில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்காக கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், முதுநகர் சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து தேவனாம்பட்டினம் மீனவர்கள், சோனாங்குப்பம் கிராமத்துக்குள் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தினர்.

இதில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தேவனாம்பட்டினத்தை சேர்ந்த ஆறுமுகம், கந்தன், ஓசைமணி, சுதாகர், சரண்ராஜ் உள்பட 20 பேர் மீது துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வந்தனர்.

இதற்கிடையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தேவனாம்பட்டினம் தம்பிராஜ் மகன் ஆறுமுகம் ( வயது 41), ஓசைமணி (39), சுதாகர் (46), நாராயணசாமி மகன் ஆறுமுகம் (46), தினகரன் (59), சரண்ராஜ் (30), தனஞ்செழியன் மகன் தென்னரசு (32), ராமு மகன் சுந்தர் (43) ஆகிய 8 பேரை துறைமுகம் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News