செய்திகள் (Tamil News)

திருவாரூரில் பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை

Published On 2018-05-21 08:27 GMT   |   Update On 2018-05-21 08:27 GMT
திருவாரூரில் பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் 12 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:

திருவாரூர் வடக்கு கோபுர வாசல் பகுதியில் வசிப்பவர் பிரவீன் (வயது 38). இவர் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி தனது குடும்பத்தினருடன் பொள்ளாச்சிக்கு சுற்றுலா சென்று விட்டார். அவர் தனது வீட்டு சாவியை அதே பகுதியில் வசிக்கும் உறவினர் திலகவதியிடம் கொடுத்து மாலை விளக்குகளை எரிய விடுமாறு கூறி சென்றார்

இந்த நிலையில் பிரவீன் வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

நேற்று மாலை திலகவதி வீட்டுக்கு சென்ற போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் பிரவீனிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து வீடு திரும்பிய அவர் நகை கொள்ளை நடந்து இருப்பது குறித்து திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருவாரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews
Tags:    

Similar News