செய்திகள்

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய ஊழியர் சஸ்பெண்ட்

Published On 2018-05-23 10:35 GMT   |   Update On 2018-05-23 10:35 GMT
ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கிய ஊழியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி:

மரக்காணம் அருகே எம்.திருக்கனூரை சேர்ந்தவர் பரமசிவம். தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினையில் லட்சுமி வி‌ஷத்தை குடித்து விட்டார். இதையடுத்து சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.

இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அங்குள்ள ஊழியர் பிரேத பரிசோதனை செய்ய ரூ. 1500 லஞ்சம் வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து லட்சுமியின் உறவினர்கள் பணத்தை கொடுத்து அவரது உடலை வாங்கி சென்றதாக தெரிகிறது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில், லட்சுமியின் உறவினர்களிடம் சவக்கிடங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் முகமூடி அணிந்தபடி பணத்தை பெற்று செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. இதனை தொடர்ந்து லஞ்சம் வாங்கிய ஊழியரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News