செய்திகள்

வேடசந்தூரில் ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய ஆட்டோக்களுக்கு அபராதம்

Published On 2018-06-21 11:30 GMT   |   Update On 2018-06-21 11:30 GMT
வேடசந்தூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வேடசந்தூர்:

வேடசந்தூர், எரியோடு, அய்யலூர் ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் ஆட்டோக்களில் உரிய ஆவணங்கள் இல்லாமலும் அளவுக்கு மீறி பயணிகளை ஏற்றிச் செல்வதாகவும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதனையடுத்து வேடசந்தூரில் போக்குவரத்து ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் ஆட்டோக்கள் சோதனை இடப்பட்டன. இந்த சோதனையில் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 6 ஆட்டோக்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

போக்குவரத்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ, சரக்கு வாகனங்களில் பொது மக்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் உரிய ஆவணங்கள் இன்றியும், பெர்மிட் இல்லாமலும் இயங்கும் வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News