செய்திகள்
திண்டுக்கல்லில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

இந்தியாவை தூய்மையான நாடாக மாற்ற வேண்டும்- கவர்னர் பன்வாரிலால் புரோகித்

Published On 2018-07-26 06:46 GMT   |   Update On 2018-07-26 06:46 GMT
அமெரிக்காவைப் போல தூய்மையான நாடாக இந்தியாவை மாற்ற நாம் ஒவ்வொருவரும் முயல வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார். #TNGovernor #BanwarilalPurohit
திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் 2 நாள் சுற்றுப்பயணமாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகை தந்தள்ளார். இன்று திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் நடந்த தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

பல்வேறு நாடுகளுக்கு செல்லும் போது அங்கிருக்கும் ஒவ்வொரு நல்ல பழக்கமும் என்னை மிகவும் கவர்ந்து விடும். குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள் கூட தூய்மை மற்றும் சுகாதாரத்துக்கு சிறந்த முக்கியத்துவம் அளிப்பதை காணலாம். குறிப்பாக அமெரிக்காவில் சுகாதாரத்துக்கு முதலிடம் கொடுத்து தங்கள் நகரை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றனர்.

எனவே அமெரிக்காவைப் போல நாமும் நமது இந்தியாவை தூய்மையான நாடாக மாற்ற முயற்சி எடுக்க வேண்டும். தூய்மை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால்தான் சுகாதார சீர்கேடு உருவாகி நமது வருமானத்தில் பாதி மருத்துவ செலவுக்கு போகிறது. அது போன்ற நிலையை மாற்றி தூய்மையான நகரை உருவாக்க ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம் என்று பேசினார்.

அதன் பிறகு தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி படிவத்தை அவர் வாசிக்க அரசு அதிகாரிகள் மற்றும் சுய உதவிக்குழு, தொண்டு நிறுவனத்தினர், மாணவ-மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கலெக்டர் வினய், டாக்டர் பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் மேயர் மருதராஜ், மாநகராட்சி ஆணையர் மனோகர் உள்பட நகரின் முக்கிய பிரமுகர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். #TNGovernor #BanwarilalPurohit
Tags:    

Similar News