செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய கும்பல்

Published On 2018-07-28 11:32 GMT   |   Update On 2018-07-28 11:32 GMT
ஆண்டிப்பட்டி அருகே வனப்பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் அரிய வகை மூலிகைகளும், மரங்களும் நிறைந்து காணப்படுகிறது. வனப்பகுதியில் சில சமூக விரோதிகள் மரங்களை வெட்டிக் கடத்துவது, வன விலங்குகளை கன்னி வைத்து வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

இதனால் வனப்பகுதியில் பசுமை இழந்து வறட்சி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வன விலங்குகள் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாயம் உள்ளது. குல்லூத்து பாறை பகுதியில் முயல் வேட்டையாடப்படுவதாக கண்டமனூர் வனச்சரகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அப்பகுதியில் வனத்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் முயல் வேட்டையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் அந்த நபர்கள் கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்த சின்னசாமி (வயது 40). ராஜசேகர் (32), சிவம் (30) என தெரிய வந்தது. அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து அவர்களிடம் இருந்து வேட்டையாடப்பட்ட முயல், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மீண்டும் முயல் வேட்டையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News