செய்திகள் (Tamil News)

கார் மோதி விபத்து- காயம் அடைந்தவர்களுக்கு கலெக்டர்-எம்.எல்.ஏ. ஆறுதல்

Published On 2018-08-01 12:19 GMT   |   Update On 2018-08-01 12:19 GMT
கோவையில் நடந்து விபத்தில் 6 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை கலெக்டர் மற்றும் எம்எல்ஏ நேரில் பார்த்து ஆறுதல் கூறினார்கள்.

கோவை:

கோவை சுந்தராபுரத்தில் பயணிகள் கூட்டத்தில் சொகுசு கார் புகுந்து 6 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களை இன்று கலெக்டர் ஹரிஹரன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

கோவை சுந்தராபுரத்தில் இன்று காலை 10.30 மணியளவில் தனியார் வாகனம் பயணிகள் மீது மோதியதில் 6 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்களில் 2 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கார் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டருடன் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் வந்து இருந்தனர்.

Tags:    

Similar News