செய்திகள்
மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.50 ஆயிரத்தை பறிகொடுத்த காண்டிராக்டர்
மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மாயமானது தொடர்பாக காண்டிராக்டர் அளித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #CashRobbery
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை பாலவநத்தத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது66). அரசு காண்டிராக்டர். இவர் நேற்று அருப்புக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து ஒரு வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரத்தை எடுத்துள்ளார்.
பணத்தை மோட்டார்சைக்கிள் பெட்டியில் வைத்துக்கொண்டு யூனியன் அலுவலகம் வந்தார். அங்குள்ள ஒரு டீக்கடை முன்பு வண்டியை நிறுத்தி விட்டு டீக்குடித்துள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மாயமானது. அவர் பணத்தை பெட்டியில் வைத்துக்கொண்டு வருவதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அதனை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீசில் மாரியப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.