செய்திகள்

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுங்கள் - தலைவர்கள் வலியுறுத்தல்

Published On 2018-08-07 16:51 GMT   |   Update On 2018-08-07 16:51 GMT
மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்சித் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
சென்னை:

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய பல்வேறு கட்சித் தலைவர்கள் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர்.  

இதுதொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக தலைவர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் முத்தரசன் மற்றும் பாலகிருஷ்ணன், மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் வலியுறுத்தி உள்ளனர். #Karunanidhi #DMK #RipKarunanidhi

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் ஒதுக்க வேண்டும். அதுதான், நாம் அந்த மாமனிதருக்கு கொடுக்கும் தகுந்த மரியாதை என பதிவிட்டுள்ளார். #DMK #Rajinikanth #RipKarunanidhi #Rajinikanth @rajinikanth
Tags:    

Similar News