செய்திகள்

அமமுக கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி தினகரன் வருகையின் போது அதிமுகவினர் மறியல்

Published On 2018-08-24 07:01 GMT   |   Update On 2018-08-24 07:01 GMT
அமமுக கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி குடியாத்தத்தில் தினகரன் வருகையின் போது அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TTVDinakaran #ADMK
குடியாத்தம்:

குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகள் உள்ளது. இதன் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.

அதில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் கொடி ஏற்றுவதாக இருந்தது. அந்த கொடிக்கம்பம் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதியின்றி அமைக்கப்பட்டதால் அதிகாரிகள் அந்த கொடிக்கம்பத்தை அகற்றினர்.

இந்த நிலையில் நேற்று இரவு தினகரன் குடியாத்தம் வழியாக சென்றார். அவர் கொடி ஏற்றுவதற்காக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை அருகே கட்சியின் நகர செயலாளர் நித்யானந்தம் தலைமையில் நிர்வாகிகள் அவசர அவசரமாக கொடிக் கம்பம் அமைத்தனர். அதற்கு அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து திடீரென அ.தி.மு.க.வினர் கொடிக்கம்பத்தை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அதேவேளையில் தினகரன் வந்த வாகனம் வந்தது.

இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொடிக் கம்பத்தை அகற்றுவதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்தனர்.

அதன்பின்னர் தினகரன் அந்த கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து சென்றார். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எதிராக அ.தி.மு.க.வினர் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் கொடிக்கம்பத்தை அகற்றினர். #TTVDinakaran #ADMK
Tags:    

Similar News