செய்திகள்

தற்கொலை செய்து கொண்டவரின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு- தந்தை உள்பட 4 பெண்கள் மீது வழக்குப்பதிவு

Published On 2018-08-28 11:49 GMT   |   Update On 2018-08-28 11:49 GMT
டி.கல்லுப்பட்டி அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டவரின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்தது குறித்து தந்தை உள்பட 4 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள டி.கல்லுப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கே. சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் ராஜேஷ்குமார் (வயது 25). மில் தொழிலாளியான இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இதில் விரக்தியடைந்த ராஜேஷ்குமார் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை போலீசுக்கு தெரிவிக்காமல் ராஜேஷ்குமாரின் உடலை உறவினர்கள் எரித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி முத்துக்காளை நீதிமன்றத்தில் புகார் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ்குமாரின் உடலை போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்ததாக அவரது தந்தை கண்ணன் மற்றும் 4 பெண்கள் மீது டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
Tags:    

Similar News