செய்திகள்

படிப்பை முடிக்கவிடாமல் தடுக்கிறார்- பெண் பேராசிரியர் மீது பிஎச்டி மாணவர் புகார்

Published On 2018-09-10 06:27 GMT   |   Update On 2018-09-10 06:27 GMT
சென்னை மாநிலக் கல்லூரியின் ஆங்கில பெண் பேராசிரியர் தனது படிப்பை முடிக்கவிடாமல் தடுக்கிறார் என பி.எச்.டி. மாணவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை:

சென்னை மாநிலக் கல்லூரியில் படிக்கும் பி.எச்.டி. மாணவர் ஒருவர் அண்ணாசதுக்கம் போலீசில் புகார் செய்துள்ளார்.

அதில், கல்லூரியின் ஆங்கில பேராசிரியர் என்.பிந்து என்பவர் தனது பி.எச்.டி படிப்பை முடிக்க விடாமல் தடுக்கிறார். மேலும் பி.எச்.டி. படிப்பில் இருந்து விலகி கொள்வதாக கடிதம் எழுதி கையெழுத்திட்டு வழங்குமாறு வற்புறுத்துகிறார் என்றும் கூறியுள்ளார். கல்லூரி பேராசிரியர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பிரிவினருக்கு எதிரான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, இந்த புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைவினரிடம் விசாரித்து வருகிறோம் என்றனர்.

புகார் கூறப்பட்ட பேராசிரியர் என்.பிந்து கூறும்போது, ‘‘இந்த மாணவர் தினசரி கல்லூரிக்கு வருவதில்லை. 2014-ம் ஆண்டு பி.எச்.டி. படிப்பில் சேர்ந்தார். ஆனால் இதுவரை ஆராய்ச்சிக்கான தலைப்பை தேர்ந்தெடுக்கவில்லை.

அப்படி இருக்கும் போது 6 மாதத்துக்கான அறிக்கையை அவரால் எப்படி தாக்கல் செய்ய முடியும் என்பன போன்ற பல்வேறு புகார்களை அவர் மீது கூறினார். #tamilnews
Tags:    

Similar News