செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் சுருட்டிய கொள்ளை நகைகளை விற்ற கணவன், மனைவி கைது

Published On 2019-02-07 09:24 GMT   |   Update On 2019-02-07 09:24 GMT
மாதவரம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம்:

மாதவரம் பால் பண்ணை சி.கே.எம். நகரை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி சரளா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

கடந்த 18-ந்தேதி இவரது வீட்டில் இருந்து 45 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம், மற்றும் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த காரை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து மாதவரம் போக்குவரத்து பால்பண்ணை போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சர்மிளா வீட்டில் சுருட்டிய நகைகளை விற்பதற்காக கொள்ளை கும்பல், எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தங்கமணி, அவரது மனைவி ராணி ஆகியோரிடம் கொடுத்து இருப்பது தெரிந்தது.

அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான தங்கமணியும், அவரது மனைவி ராணியும் இதே போல் வேறு கொள்ளையர்களிடம் இருந்து நகைகளை வாங்கி விற்று கொடுத்தனரா? அவர்களுடன் தொடர்பில் உள்ள கூட்டாளிகள் யார்? யார்? என்று விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் சர்மிளாவின் திருடப்பட்ட கார் அவரது வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்தது.

போலீசார் நெருங்குவதை அறிந்த கொள்ளை கும்பல் திருடிய காரை விட்டுச் சென்று உள்ளனர். காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News