செய்திகள்

கோவை அருகே டெம்போ டிரைவரை மிரட்டி ரூ.6½ லட்சம் மதிப்புள்ள பான்மசாலா பண்டல்களை கடத்திய கும்பல்

Published On 2019-04-15 09:53 GMT   |   Update On 2019-04-15 09:53 GMT
கோவை அருகே டெம்போ டிரைவரை மிரட்டி ரூ.6½ லட்சம் மதிப்புள்ள பான்மசாலா பண்டல்களை கடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை:

ராஜஸ்தானை சேர்ந்தவர் தேஜஸ்குமார் (வயது 22). இவர் கோவை ஆர்.ஜி.தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கிறார்.

நேற்று நிறுவனத்தில் இருந்து ரூ.6½ லட்சம் மதிப்புடைய பான் மசாலா பண்டல்களை டெம்போவில் ஏற்றி செல்வபுரத்தில் ஒரு கடைக்கு எடுத்து சென்றார். கடைக்காரர் பான் மசாலா பண்டல்களை பேரூரில் உள்ள உறவினர் குடோனில் இறக்கி வைக்குமாறு கூறினார்.

இதைத்தொடர்ந்து தேஜஸ் குமார் பான்மசாலா பண்டல்களை பேரூருக்கு எடுத்து சென்றார். போஸ்டல் காலனி அருகே சென்ற போது காரில் வந்த 6 பேர் கும்பல், டெம்போவை வழி மறித்து தேஜஸ்குமாரை மிரட்டினர். பின்னர் அவரை டெம் போவுடன் கடத்தி சென்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பான் மசாலா பண்டல்களை வேறு வாகனத்தில் ஏற்றிய கும்பல் தேஜஸ்குமாரை செட்டிப்பாளையம் பகுதியில் விட்டு விட்டு சென்றனர்.

இதுகுறித்து தேஜஸ்குமார் பேரூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அடையாளம் தெரியாத 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News