செய்திகள்
கொட்டாம்பட்டி அருகே இளம்பெண் தற்கொலை
கொட்டாம்பட்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொட்டாம்பட்டி:
கொட்டாம்பட்டி அருகே உள்ள மணப்பச்சேரியை சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. இவருடைய மகன் தினகரன் தோட்டத்தில் காவல் வேலை செய்து வந்தார். இவருக்கும் கார்த்திகாதேவி (வயது25) என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். தினகரன் அடிக்கடி குடித்து விட்டு வருவதால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்தநிலையில் மனமுடைந்த கார்த்திகாதேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.