செய்திகள் (Tamil News)
திருப்பூர் ரெயில் நிலையத்தில் இன்று அலைமோதிய பயணிகள் கூட்டம்.

திருப்பூர் ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பு

Published On 2021-11-28 06:41 GMT   |   Update On 2021-11-28 08:45 GMT
கட்டணம் குறைக்கப்பட்டாலும் பயணிகள் கூட்டம் கூடுவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
திருப்பூர்:

நடப்பாண்டு தொடக்கத்தில் கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.50ஆக உயர்த்தப்பட்டது. சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட சேலம் ,ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் ஆகிய  ரெயில் நிலையங்களில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.

தற்போது கொரோனா குறைந்து வருவதால் கட்டுப்பாடு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பழைய நடைமுறைப்படி ரூ.10 மட்டும் பிளார்ட்பார்ம் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கட்டணம் குறைக்கப்பட்டாலும் பயணிகள் கூட்டம் கூடுவதை  முடிந்தளவு தவிர்க்க வேண்டும் .ரெயில்வே எல்லைக்குட்பட்ட பகுதியில் சமூக இடைவெளியை கட்டாயம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரெயில் நிலையங்களில் போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News