இந்தியா (National)

குவாட், ஐ.நா. மாநாடு: அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

Published On 2024-09-21 01:10 GMT   |   Update On 2024-09-21 01:10 GMT
  • ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.
  • எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐ.நா. சபையில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார்.

குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க நேரப்படி 21-ந்தேதி (இன்று) பங்கேற்கிறார்.

இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

அடுத்த நாள் நியூயார்க் நகரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 23-ந்தேதி தேதி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்த பயணத்தின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

அமெரிக்க புறப்பட்டுச் சென்ற பிரதமர் மோடி "இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, செழிப்புக்காக பணியாற்றும் முக்கிய குழுவாக குவாட் உருவெடுத்துள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடியை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு சார்பில் போட்டியில் முன்னாள் ஜனாதிபதி டொனால் டிரம்ப் சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News