உள்ளூர் செய்திகள் (District)
பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் வாரச்சந்தை இன்று நடைபெற்ற போது எடுத்த படம்.

நாளை ஊரடங்கால் பெருந்துறை வாரசந்தை இன்று தொடங்கியது

Published On 2022-01-08 10:22 GMT   |   Update On 2022-01-08 10:22 GMT
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பெருந்துறை வாரச்சந்தை நாளை ஊரடங்கு காரணமாக இன்றே தொடங்கியது.
பெருந்துறை:

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பெருந்துறை வாரச்சந்தை நாளை ஊரடங்கு காரணமாக இன்றே தொடங்கியது.

பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வாரசந்தையானது வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். 

தமிழகஅரசு கொரேனாதொற்று அதிகரிப்பால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்து உள்ளது.

இதனை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  வாரசந்தையை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக  இன்று சனிக்கிழமை செயல்பட மாற்றி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் கருமாண்டி செல்லிபாளையம் வாரச்சந்தையானது இன்று சனிக்கிழமை செயல்படதொடங்கியது.

இந்நிலையில் சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிந்து,  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு பேரூராட்சி பணியாளர்கள் ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் சந்தைப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர்.

Similar News