உள்ளூர் செய்திகள் (District)
பாளை மார்க்கெட் பகுதியில் ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி போடப்பட்ட காட்சி.

நெல்லையில் இன்று தடுப்பூசி முகாம்களில் திரண்ட பொதுமக்கள்

Published On 2022-01-08 12:27 GMT   |   Update On 2022-01-08 12:27 GMT
நெல்லையில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்காக மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்தனர்.
நெல்லை:

நெல்லையில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இன்று 18-வது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில் 577 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இது தவிர மாநகர பகுதியில் 154 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு தடுப்பூசி போட்டு வருகின்றனர். 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி போடும் பணியும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. ஏராளமான பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் திரண்டு தடுப்பூசி போட்டு வருகின்றனர். 

இதுதவிர சந்திப்பு ரெயில் நிலையம், பெரிய அளவிலான வணிக வளாகங்கள் மற்றும் கோவில்களின் முன்பும் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் சுமார் 30-பேர் உள்பட ஏராளமான பேருக்கு கொரோனா பரிசோதனை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வைத்து எடுக்கப்பட்டது.

டவுன் நெல்லையப்பர் கோவிலில் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.  இதில் அந்த சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகள், காய்கறி மார்க்கெட் மற்றும் ஜவுளி கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Similar News