உள்ளூர் செய்திகள் (District)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்துக்கு மரியாதை.

நேதாஜி பிறந்தநாளுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும்

Published On 2022-01-24 08:54 GMT   |   Update On 2022-01-24 08:54 GMT
நேதாஜி பிறந்தநாளுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று முக்குலத்து புலிகள் கட்சி நிறுவன தலைவர் ஆறுசரவணதேவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் காமேஸ்வரத்தில் சுதந்திர போராட்ட வீரர் 
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 
படத்துக்கு முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறுசரவணத்தேவர் மாலை 
அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குடியரசு தின விழாக்கள் வழக்கமாக ஜனவரி 24 ஆம் தேதி 
தொடங்கி 26-ம் தேதி வரை மத்திய அரசின் சார்பில் நடைபெறும். 

இந்த ஆண்டு குடியரசு தினவிழா நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 
பிறந்தநாள் அன்றே தொடங்கி ஜனவரி 26-ந்தேதி வரை 
நடைபெறும் என்று அறிவித்துள்ளதை முக்குலத்து புலிகள் 
கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். 

காந்தி ஜெயந்தி அன்று தேசம் முழுவதும் பொது விடுமுறையாக 
அளிப்பது போல் நேதாஜியின் பிறந்தநாளுக்கும் தேசம் முழுவதும் 
பொது விடுமுறை அளிக்க வேண்டும். 

மேலும் அவரது பிறந்தநாளன்று அவரது படைப்பிரிவில் 
இருந்த  முன்னாள் ஐ.என்.ஏ வீரர்கள் மற்றும் நேதாஜி 
தொடங்கிய பார்வர்டு பிளாக் கட்சியின் முதுபெரும் 
தலைவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் முக்குலத்து புலிகள் கட்சி நிர்வாகிகள் 
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News